தேவையானவை: காலிஃப்ளவர் - ஒரு கப், தக்காளி, வெங்காயம் - தலா 2, மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 5 டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது தேவைக்கேற்ப, கடுகு, சோம்பு - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், தோசை மாவு - 2 கப், தேங்காய்த் துருவல் - கால் கப், முந்திரித் துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, உப்பு - தேவையான அளவு. செய்முறை: தண்ணீரில் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, அதில் உதிர்த்த காலிஃப்ளவரைப் போட்டு பத்து நிமிடங்கள் வைக்க வேண்டும். தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், முந்திரித் துண்டுகள் இவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கெட்டியாக அரைக்க வேண்டும். வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, சோம்பு தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து வதக்க வேண்டும். காலிஃப்ளவரைச் சேர்த்து வதக்கி, அரை கப் தண்ணீர் ஊற்றி வேகவைக்க வேண்டும். வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து வதக்க...