முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கோபி மசாலா ரோஸ்ட்

சமீபத்திய இடுகைகள்

கோபி மஞ்சூரியன்

தேவையானவை: காலிஃப்ளவர் சிறியது - ஒன்று மைதா மாவு - ஒரு மேசைக்கரண்டி கார்ன்ஃப்ளார் - அரை மேசைக்கரண்டி தனி மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி உப்பு - ஒரு சிட்டிகை + ஒரு தேக்கரண்டி குடமிளகாய் - ஒன்று மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி இஞ்சி - பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி தக்காளி சாஸ் - 3 மேசைக்கரண்டி வெங்காயம் - 2 மிளகாய்த்தூள் - ஒன்றரை தேக்கரண்டி பூண்டு - 8 பல் செய்முறை: பூண்டை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், குடமிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காலிஃப்ளவரை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருள்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு தட்டில் காலிஃப்ளவர் துண்டுகளைப் போட்டு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சுடுநீரை ஊற்றி 5 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் எடுத்து தண்ணீரை வடிகட்டி அதனுடன் மைதா மாவு, கார்ன்ஃப்ளார், மிளகாய் தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டு பிசைந்துக் கொள்ளவும். அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசறி 10 நிமிடம் ஊற வைக்கவும். வாணலியில் ஒன்றரை கப் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ஊற வைத்த காலிஃப்ளவர் துண்டு...

நண்டு மிளகு சூப்

தேவையானவை: பெரிய நண்டு - 2 மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி சோள மாவு - ஒரு தேக்கரண்டி சோளம் - ஒரு சிறிய டின் முட்டை - 2 உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் நண்டின் ஓட்டை எடுத்து கழுவிச் சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேகவைத்துக் கொள்ளவும். வெந்த நண்டின் சதை பகுதியை ஒரு பாத்திரத்தில் போட்டு உதிர்த்துக் கொள்ளவும். நண்டு கறியில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து பிறகு அதில் சோளம், சோள மாவு, உப்பு மற்றும் மிளகு சேர்த்துக் கொதிக்க விடவும். கொதித்த பிறகு முட்டையின் மஞ்சள் கருவை அடித்து ஊற்றி சிறிது கெட்டியாகும் வரை கலக்கவும். அதன் பிறகு முட்டையின் வெள்ளைக் கருவையும் சேர்த்து சிறிது நேரம் கலக்கி அடுப்பில் இருந்து இறக்கவும். பிறகு சூடாகப் பரிமாறவும்.

சிக்கன் - மஷ்ரூம் கறி

தேவையானவை: சிக்கன் - முக்கால் கிலோ காளான் - கால் கிலோ குடமிளகாய் - இரண்டு வெங்காயம் - இரண்டு தக்காளி - நான்கு இஞ்சி - இரண்டு அங்குலத்துண்டு பூண்டு - ஆறு பற்கள் சீரகம் - ஒரு தேக்கரண்டி மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி வெண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு கொத்து கொத்தமல்லி - ஒரு பிடி செய்முறை சிக்கனைச் சிறு சிறு துண்டுகளாக்கி, சிறிது உப்பைப் போட்டு வேகவைத்து வடிகட்டிக் கொள்ளவும். காளானை நன்கு துடைத்து நான்கு, நான்காக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், குடமிளகாயை ஒரே அளவாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நன்கு கரைத்துக் கொள்ளவும். மசாலாத்தூள் வகைகளை சிறிது நீர் சேர்த்து குழைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், எண்ணெயைக் கலந்து காயவைக்கவும். முதலில் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பிறகு இஞ்சி, பூண்டு, சீரக...

குறுகு தானிய உப்புமா

தேவையான பொருட்கள்: குதிரைவாலி அரிசி-100 கிராம்;  சாமை அரிசி-50 கிராம்;  வரகு அரிசி-100 கிராம்;  தினை அரிசி-50 கிராம்;  காய்கறிகள்-1 கப் ( தேவைக்கேற்ப);  நல்லெண்ணெய்-தேவைக்கேற்ப;  மிளகாய் வற்றல்-6;  கடுகு-சிறிதளவு;  உளுத்தம் பருப்பு-சிறிதளவு;  கறிவேப்பிலை-சிறிதளவு;  கொத்தமல்லி-சிறிதளவு;  உப்பு-தேவையான அளவு. செய்முறை: ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, அதனுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தாளிக்கவும். அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வெட்டிவைத்த காய்கறிகளையும் உப்பையும் கலந்து 2 நிமிடம் வேகவிடவும். இத்துடன் குருணையாகக்ப்படட் குதிரைவாலி, சாமை, வரகு மற்றும் தினை அரிசியைக் சேர்த்து நன்றாக வேகும்வரை கிளறினால், குறுதானிய உப்புமா தயார். பலன்கள்: குறுதானியங்களில் உள்ள கனிம சத்து, உடல் கட்டமைப்பை செதுக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. பாஸ்பரஸ், சுண்ணாம்புச் சத்துடன் சேர்ந்து, எலும்பு, பல் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் பாஸ்பேட்டாக மாறுகிறது. செல் வளர்சிதை மாற்றத்திலும்...

குதிரைவாலி- காய்கறி உப்மா

தேவையான பொருட்கள்: குதிரைவாலி-1 கப்;  பீன்ஸ்-10 ( பொடியாக நறுக்கியது);  கேரட்- பாதியளவு- (நன்கு துருவியது); தேங்காய்( துருவியது)-1/4 கப்;   தேங்காய் எண்ணெய்-தாளிக்க;  கடுகு-1 டீ ஸ்பூன்;  உளுத்தம் பருப்பு-1 ட்ஸ்பூன்;  சிவப்பு மிளகாய்-2;  பெருங்காய பௌடர்-1/4 டீஸ்பூன்;  தண்ணீர்-2 கப்;  கறிவேப்பிலை மற்றும் உப்பு. செய்முறை: குதிரைவாலியைக் கழுவி தனியாக வைக்கவும்/. ஒரு குக்கரில் தேங்காயெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, சிவப்பு மிளகாய் மற்றும் பெருங்காயம் போட்டு தாளிக்கவும். நறுக்கிய பீன்ஸ், கேரட்டைப் போட்டு 2 நிமிடம் வதக்கவும். தேங்காய்த் துருவலை சேர்க்கவும். . அத்துடன் சுத்தம் செய்யப்படட் குதிரவாலியை சேர்த்து, தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கி மூடவும். 4 விசில் விட்டு எடுக்கவும். சாதாரணமாகவும் சாப்பிடலாம். தேங்காய்ச் சட்னியுடனும் சாப்பிடலாம்.

ஓட்ஸ் வடை

தேவையான பொருட்கள்: ஓட்ஸ்- 2 டம்ளர்;  ரவை-1 டம்ளர்;  தயிர்-100 மில்லி;  பச்சை மிளகாய்-5;  துருவிய தேங்காய்-4 தேக்கரண்டி;  பெருங்காயத்தூள், கொத்தமல்லித்தழை, எண்ணெய், உப்பு. செய்முறை: ரவையைப் பக்குவமாக வறுத்துக்கொள்ளவும். தேங்காய்த்துருவலுடன் விதை நீக்கிய மிளகாயைச் சேர்த்து அரைத்து தயிரில் கொட்டவும். இத்துடன் ரவை, நறுக்கிய கொத்தமல்லித்தழை, ஓட்ஸ்சேர்த்து நன்கு கிளறவும். கலவை கெட்டியாக இல்லாவிட்டால், ஓட்ஸ் மற்றும் ரவை சேர்க்கலாம். இதை வடையாகத் தட்டி எண்ணெயில் பொந்நிறமாகப் பொறித்தெடுக்கவும். வித்தியாச சுவை கொண்ட ஓட்ஸ் வடை தயார்.