தேவையான பொருட்கள்:
குதிரைவாலி அரிசி-100 கிராம்;
சாமை அரிசி-50 கிராம்;
வரகு அரிசி-100 கிராம்;
தினை அரிசி-50 கிராம்;
காய்கறிகள்-1 கப் ( தேவைக்கேற்ப);
நல்லெண்ணெய்-தேவைக்கேற்ப;
மிளகாய் வற்றல்-6;
கடுகு-சிறிதளவு;
உளுத்தம் பருப்பு-சிறிதளவு;
கறிவேப்பிலை-சிறிதளவு;
கொத்தமல்லி-சிறிதளவு;
உப்பு-தேவையான அளவு.
செய்முறை:
ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, அதனுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தாளிக்கவும். அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வெட்டிவைத்த காய்கறிகளையும் உப்பையும் கலந்து 2 நிமிடம் வேகவிடவும். இத்துடன் குருணையாகக்ப்படட் குதிரைவாலி, சாமை, வரகு மற்றும் தினை அரிசியைக் சேர்த்து நன்றாக வேகும்வரை கிளறினால், குறுதானிய உப்புமா தயார்.பலன்கள்:
குறுதானியங்களில் உள்ள கனிம சத்து, உடல் கட்டமைப்பை செதுக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. பாஸ்பரஸ், சுண்ணாம்புச் சத்துடன் சேர்ந்து, எலும்பு, பல் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் பாஸ்பேட்டாக மாறுகிறது. செல் வளர்சிதை மாற்றத்திலும் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் உடலின் நச்சுத் தன்மையை நீக்குவதுடன், மார்பக புற்று நோயின் தடுப்பு மருந்தாகவும், இவை செயல்படுகிறது.

கருத்துகள்
கருத்துரையிடுக