முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கேழ்வரகு அல்வா

தேவையான பொருட்கள்;

கேழ்வரகு- 50 கிராம்; 
கருப்பட்டி-25 கிராம்; 
சர்க்கரை-10 கிராம்; 
நெய்- தேவையான அளவு; 
நல்லெண்ணெய்-தேவையான அளவு; 
ஏலக்காய், முந்திரி மற்றும் திராட்சை-சிறிதளவு.

செய்முறை: 


ஒரு வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி, கேழ்வரகை 3 நிமிடங்கள் வறுக்க வேண்டும். பிறகு வறுபட்ட கேழ்வரகின் சூடு ஆறும் வரை காத்திருந்து, மீண்டும் அதை ஒரு கடாயில் இட்டு, உடைத்து வைத்திருக்கும் கருப்பட்டியையும் ஒரு தம்ளர் தண்ணீரையும் ஊற்றி கிளறவேண்டும். கூடவே, கொஞ்சம் கொஞ்சமாக நல்லெண்ணெய் மற்றும் நெய் சேர்த்து, கட்டி விழுந்துவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். கலவை, அல்வா பதத்திற்கு வந்தவுடன் ஏலக்காய், முந்திரி, திராட்சை கலந்து இறக்கினால், கேழ்வரகு அல்வா’ தயார்.
பயன்கள்;
கேழ்வரகில் புரதம், சுண்ணாம்பு மற்றும் இரும்புச் சத்து அதிகளவில் இருப்பதுடன், வைட்டமின் பி-1 எனப்படும் தையமின் சத்தும் உள்ளது. இது புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் பெற்றது. மேலும், கேழ்வரகில் உள்ள ‘ட்ரிப்டோபேன்’, அதீத பசி உணர்வை குறைக்கிறது. இதனால், உடல் எடை அதிகரிப்பது தடுக்கப்படுகிறது.

கருத்துகள்