தேவையானவை:-
இறால் - கால் கிலோ
பீன்ஸ் - கால் கிலோ
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
வடகம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
புளித் தண்ணீர் - 2 தம்ளர்
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:-
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வடகம், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கி பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.
வதக்கியவற்றுடன் எல்லா தூள் வகைகளுடன் உப்பும் சேர்த்து வாசம் போக கிளறவும். பீன்ஸ் பாதியளவு வெந்ததும் இறால் சேர்த்து கிளறவும். இறால் பீன்ஸ் கலவையுடன் புளித் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு சிறு தீயில் 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். இறால் வெந்தவுடன் கறிவேப்பிலை தூவி இறக்கவும். சுவையான இறால் பீன்ஸ் குழம்பு தயார்.

கருத்துகள்
கருத்துரையிடுக