தேவையானவை:-
மட்டன் கீமா - 100 கிராம்
கோதுமை மாவு - 1 கப்
இஞ்சி - பூண்டு விழுது - 2 ஸ்பூன்
வெங்காயம் - 1
பொரித்த வெங்காயம் - 2
உப்பு - தேவைக்கு
மிளகாய்த்தூள்- அரை ஸ்பூன்
தனியாத்தூள் - 1 ஸ்பூன்
மிளகுத்தூள் – கால் ஸ்பூன்
கடலை மாவு - தேவைக்கு
ஏலக்காய் ஜாதிபத்திரி தூள் - சிறிதளவு
எண்ணெய் - (கைமா தாளிக்க, சப்பாத்தி சுட தேவைக்கு)
செய்முறை:-
கோதுமை மாவில் சிறிதளவு உப்பு மற்றும் வெதுவெதுப்பான நீர் சேர்த்து பிசைந்து காற்று புகாத டப்பாவில் ஒரு மணி நேரம் வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு பொடியாய் நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும். இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும் கீமாவைச் சேர்க்கவும்.
சுருண்டு வந்ததும் உப்பு, தனியாத்தூள், மிளகாய்தூள், மிளகுத்தூள் மற்றும் ஏலக்காய் ஜாதிபத்திரி தூளைச் சேர்த்து மசாலா வாசம் நீங்க கிளறவும். நீர் தெளித்து மூடிவிட்டு வேகவிடவும். கீமா வெந்ததும் கொத்தமல்லி, பொரித்த வெங்காயம் சேர்த்து கிளறவும். கெட்டியாக ஆகும் பதம் வரும் அளவுக்கு சிறிது சிறிதாக கடலை மாவு சேர்த்து உருண்டை பிடிக்கும் பதம் வந்த பிறகு இறக்கவும்
சப்பாத்தி மாவைத் திரட்டி நடுவில் கீமா பூரணத்தை வைத்து மூடி, மீண்டும் திரட்டி வைக்கவும். தோசைக்கல்லில் நெய் அல்லது எண்ணெய் தடவி சப்பாத்திகளாகச் சுட்டு எடுக்கவும். சுவையான கீமா ஸ்டஃப்டு சப்பாத்தி ரெடி!

கருத்துகள்
கருத்துரையிடுக