முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெஜிடபுள் சீஸ் தோசை!

தேவையான பொருள்கள்:-

தோசை மாவு - ஒரு கப்
காலிஃப்ளவர் - பாதி அளவான பூ
காரட் - 2
தக்காளி - ஒன்று
பெரிய வெங்காயம் - ஒன்று
உருளைக்கிழங்கு - ஒன்று
பச்சைப் பட்டாணி - 2 மேசைக்கரண்டி
நறுக்கிய சீஸ் துண்டுகள் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:-

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். காலிஃப்ளவரை சிறிதாக உதிர்த்துக் கொள்ளவும். காரட்டை துருவி வைக்கவும். உருளைக்கிழங்கை ஃபிங்கர் சிப்ஸ் வடிவில் நறுக்கவும். தக்காளி மற்றும் வெங்காயத்தை நீளமாக நறுக்கவும்.
வெங்காயத்தை வதக்கி எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, பின்னர் எண்ணெயில் பொரித்து எடுத்து வைக்கவும். காலிஃப்ளவர், காரட், பட்டாணி ஆகியவற்றை ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். (அனைத்து காய்களையும் கிழங்கு உட்பட - இட்லி தட்டில் ஒரே நேரத்தில் வேகவைத்து எடுக்கலாம்).
அடுப்பில் தோசைக் கல்லை காயவைத்து, தோசை மாவை எடுத்து சற்று கனமான தோசையாக ஊற்றவும். (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). வேக வைத்த காய்கறிகளையும், நறுக்கிய தக்காளியையும் தோசை மேல் தூவி அலங்கரிக்கவும். பிறகு சீஸ் துண்டுகளையும் மேலே தூவவும். தோசையை மூடி போட்டு, மிதமான தீயில் அப்படியே வேகவிடவும். (திருப்பிப் போட வேண்டாம்). காய்கறிகள் ஏற்கனவே வெந்திருப்பதால். சீஸ் முழுவதும் உருகிவிடாமல் லேசாக சூடாகி, மென்மையாகும் வரை வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான வெஜிடபுள் சீஸ் தோசை தயார். தொட்டுக் கொள்ள தக்காளி சாஸ் அல்லது தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறுகு தானிய உப்புமா

தேவையான பொருட்கள்: குதிரைவாலி அரிசி-100 கிராம்;  சாமை அரிசி-50 கிராம்;  வரகு அரிசி-100 கிராம்;  தினை அரிசி-50 கிராம்;  காய்கறிகள்-1 கப் ( தேவைக்கேற்ப);  நல்லெண்ணெய்-தேவைக்கேற்ப;  மிளகாய் வற்றல்-6;  கடுகு-சிறிதளவு;  உளுத்தம் பருப்பு-சிறிதளவு;  கறிவேப்பிலை-சிறிதளவு;  கொத்தமல்லி-சிறிதளவு;  உப்பு-தேவையான அளவு. செய்முறை: ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, அதனுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தாளிக்கவும். அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வெட்டிவைத்த காய்கறிகளையும் உப்பையும் கலந்து 2 நிமிடம் வேகவிடவும். இத்துடன் குருணையாகக்ப்படட் குதிரைவாலி, சாமை, வரகு மற்றும் தினை அரிசியைக் சேர்த்து நன்றாக வேகும்வரை கிளறினால், குறுதானிய உப்புமா தயார். பலன்கள்: குறுதானியங்களில் உள்ள கனிம சத்து, உடல் கட்டமைப்பை செதுக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. பாஸ்பரஸ், சுண்ணாம்புச் சத்துடன் சேர்ந்து, எலும்பு, பல் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் பாஸ்பேட்டாக மாறுகிறது. செல் வளர்சிதை மாற்றத்திலும்...

இறால் ஃப்ரை

தேவையானவை: இறால் - 200 கிராம் உருளைக்கிழங்கு - 2 இஞ்சி - பூண்டு விழுது - 2 தேக்கரண்டி பெரிய வெங்காயம் - ஒன்று தக்காளி விழுது - கால் கப் மிளகாய்தூள் - அரை தேக்கரண்டி மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி மிளகு, சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி கடுகு - அரை தேக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு கொத்து எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: இறாலைச் சுத்தம் செய்து ஒரு தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி விழுது, மிளகாய்தூள், மஞ்சள்தூள், மிளகு, சீரகத்தூள், உப்பு, நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும். உருளைக்கிழங்கு வெந்து, நீர் வற்றி மசாலா புரண்டு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், ஒரு தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து தாளிக்கவும். தாளித்தவற்றுடன் வேகவைத்த கலவையைக் கொட்டி 3 நிமிடங்கள் கிளறி இறக்கவும். சுவைமிக்க இறால் ஃப்ரை ரெடி.

சுறா மீன் புட்டு

தேவையானவை:- சுறா மீன் - 3 துண்டு மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி தண்ணீர் - ஒரு கப் பச்சை மிளகாய் - 2 சின்ன வெங்காயம் - 10 சோம்புத்தூள் - அரை தேக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு கொத்து உப்பு - அரை தேக்கரண்டி எண்ணெய் - 2 மேசைக்கரண்டி தேங்காய் - கால் கப் செய்முறை:- சுறா மீன் துண்டுளின் மேலே உள்ள தோலை உரித்து சுத்தம் செய்து கொள்ளவும். மீனுடன் 2 கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள்தூள் போட்டு மூடி 8 நிமிடங்கள் வேக வைக்கவும். வெந்ததும் மீனை எடுத்து உதிர்த்து விடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பின்னர் கறிவேப்பிலை போட்டு வதக்கி விட்டு, சோம்புத்தூள், உப்பு போட்டு புரட்டவும். அதனுடன் உதிர்த்து வைத்திருக்கும் மீனைப் போட்டு 3 நிமிடங்களுக்குக் கிளறி, அதனுடன் தேங்காய்த் துருவலைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். சுவையான சுறா மீன் புட்டு தயார்.