முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எந்தவகை ரத்தம் உள்ளவர்கள் என்ன வகையான உணவுகளை சாப்பிடனும்?

இரத்தத்தின் தன்மைக்கு ஏற்றபடி அமில, காரத்தன்மையுள்ள உணவு வகைகளை உண்டால் அது நமது செயல் திறனை அதிகரிக்கும். ஆரோக்கியமான உடலை தரும். இந்த பதிவில் எந்த இரத்த வகை கொண்டவர்களுக்கு என்ன மாதிரியான உணவுகள் பொருந்தும் என்று பார்க்கலாம்.

’ஏ’ பிரிவு இரத்த வகை:-


இவர்களுக்கு சைவ உணவு மட்டுமே பொருத்தமானது. புத்தம் புதிய காய்கறிகள்,கீரை வகைகளை இவர்கள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ் மற்றும் பயறுவகைகளில் அதிகமான புரதச்சத்து உள்ளது. அவை இவர்களுக்கு இதய நோய்கள், புற்றுநோய்,நீரிழிவு போன்றவை ஏற்படுவதை ஓரளவு தடுக்கும். ‘ஏ’ இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு மேற்கண்ட நோய்கள் ஏற்படும் சூழ்நிலை அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த இரத்த வகை கொண்டவர்கள் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்ப்பது நலம். இவை இவர்களுக்கு எளிதில் சீரணம் ஆவதில்லை. முட்டைக்கோஸ், தக்காளி, உருளைக்கிழங்கு,மிளகு போன்றவற்றில் இருக்கும் ‘லெக்டின்’ என்ற பொருள் இவர்களின் வயிற்றுக்கு தொந்தரவை தரும்.


‘பி’ இரத்த வகை:-

மிதமான மென்மையான உணவுகளே இந்த வகை இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு ஏற்றவை. பழம், காய்கறிகளை இவர்கள் அதிகமாக சாப்பிடலாம். பாலும், பால்வகை பொருட்களும் உடலுக்கு உகந்தவை அல்ல. தக்காளி அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறுகளை உருவாக்கும். சோளம், கோதுமை,பயறு வகைகள்,வேர்க்கடலை சாப்பிட்டால் இவர்களின் உடல் எடை அதிகரிக்கும். இவற்றில் இருக்கும் சில ரசாயனங்கள் இந்த ரத்த பிரிவுகாரர்களுக்கு மந்தம், சோர்வை உருவாக்கும்.

‘ஏபி’ பிரிவு இரத்த வகை:-

இந்த பிரிவு இரத்தம் இருப்பவர்கள் இறைச்சி உணவை அதிகம் உண்பது கூடாது. இவர்களது வயிற்றில் உணவை சீரணம் செய்யும் அமிலச்சுரப்பு குறைவாக இருப்பதுண்டு. அதனால் சீரணம் மெதுவாக நடக்கும். குறிப்பாக இவர்கள் கோழி இறைச்சியை உண்பது கூடாது. பால், வேர்க்கடலை மற்றும் பருப்பு வகை பொருட்கள், தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் கோதுமையை அதிகம் சேர்க்க கூடாது. இந்த இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு அதிகமாக சளித் தொந்தரவு இருக்கும். காலையில் இளம் சுடுநீரில் பாதி எலுமிச்சை பழத்தை பிழிந்து வெறும் வயிற்றில் குடித்தால் சளி தொந்தரவு நீங்கும்.

‘ஓ’ இரத்த பிரிவு:-


இவர்கள் மாமிச உணவுகளை சாப்பிடலாம். ஆனால் அதைவிட அதிக நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிடலாம், இயற்கையாக இவர்களின் வயிற்றில் சீரணத்திற்கு சுரக்கும் அமிலத்தின் அளவு அதிகமாக இருப்பதுண்டு. அதனால் செரிக்க சற்று கடினமான உணவுகளை எடுத்துக் கொண்டாலும் எளிதில் சீரணமாகி விடும். கோதுமை இவர்களுக்கு பொருந்தாது. காரணம், கோதுமையில் இருக்கும் ஒரு வகை ரசாயனம் இவர்களது உடலுக்கு பொருந்துவதில்லை. பால் பொருட்களும் பொருந்துவதில்லை. பீன்ஸ்,பயறு வகைகளும் இவர்களுக்கு எதிராக இருக்கின்றன. இவற்றை அதிகம் சாப்பிடும் நிலையில் மந்தமான குணம் காணப்படுவதுண்டு. அது போல் முட்டைகோஸ்,காலிபிளவர்,கடல் உயிரினங்கள்,அயோடின் சேர்நத உப்பு போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது.

இங்கு குறிப்பிட்ட உணவுப்பொருட்கள் உங்களுக்கு ஒத்து வராத ஒன்றாக நீங்கள் அறிந்தால் அந்த உணவை தவிர்க்கலாம். மற்ற படி இந்த தகவல் பொதுவானது என்பதை உங்கள் கவனத்திற்கு வைக்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறுகு தானிய உப்புமா

தேவையான பொருட்கள்: குதிரைவாலி அரிசி-100 கிராம்;  சாமை அரிசி-50 கிராம்;  வரகு அரிசி-100 கிராம்;  தினை அரிசி-50 கிராம்;  காய்கறிகள்-1 கப் ( தேவைக்கேற்ப);  நல்லெண்ணெய்-தேவைக்கேற்ப;  மிளகாய் வற்றல்-6;  கடுகு-சிறிதளவு;  உளுத்தம் பருப்பு-சிறிதளவு;  கறிவேப்பிலை-சிறிதளவு;  கொத்தமல்லி-சிறிதளவு;  உப்பு-தேவையான அளவு. செய்முறை: ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, அதனுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தாளிக்கவும். அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வெட்டிவைத்த காய்கறிகளையும் உப்பையும் கலந்து 2 நிமிடம் வேகவிடவும். இத்துடன் குருணையாகக்ப்படட் குதிரைவாலி, சாமை, வரகு மற்றும் தினை அரிசியைக் சேர்த்து நன்றாக வேகும்வரை கிளறினால், குறுதானிய உப்புமா தயார். பலன்கள்: குறுதானியங்களில் உள்ள கனிம சத்து, உடல் கட்டமைப்பை செதுக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. பாஸ்பரஸ், சுண்ணாம்புச் சத்துடன் சேர்ந்து, எலும்பு, பல் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் பாஸ்பேட்டாக மாறுகிறது. செல் வளர்சிதை மாற்றத்திலும்...

இறால் ஃப்ரை

தேவையானவை: இறால் - 200 கிராம் உருளைக்கிழங்கு - 2 இஞ்சி - பூண்டு விழுது - 2 தேக்கரண்டி பெரிய வெங்காயம் - ஒன்று தக்காளி விழுது - கால் கப் மிளகாய்தூள் - அரை தேக்கரண்டி மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி மிளகு, சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி கடுகு - அரை தேக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு கொத்து எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: இறாலைச் சுத்தம் செய்து ஒரு தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி விழுது, மிளகாய்தூள், மஞ்சள்தூள், மிளகு, சீரகத்தூள், உப்பு, நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும். உருளைக்கிழங்கு வெந்து, நீர் வற்றி மசாலா புரண்டு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், ஒரு தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து தாளிக்கவும். தாளித்தவற்றுடன் வேகவைத்த கலவையைக் கொட்டி 3 நிமிடங்கள் கிளறி இறக்கவும். சுவைமிக்க இறால் ஃப்ரை ரெடி.

சுறா மீன் புட்டு

தேவையானவை:- சுறா மீன் - 3 துண்டு மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி தண்ணீர் - ஒரு கப் பச்சை மிளகாய் - 2 சின்ன வெங்காயம் - 10 சோம்புத்தூள் - அரை தேக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு கொத்து உப்பு - அரை தேக்கரண்டி எண்ணெய் - 2 மேசைக்கரண்டி தேங்காய் - கால் கப் செய்முறை:- சுறா மீன் துண்டுளின் மேலே உள்ள தோலை உரித்து சுத்தம் செய்து கொள்ளவும். மீனுடன் 2 கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள்தூள் போட்டு மூடி 8 நிமிடங்கள் வேக வைக்கவும். வெந்ததும் மீனை எடுத்து உதிர்த்து விடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பின்னர் கறிவேப்பிலை போட்டு வதக்கி விட்டு, சோம்புத்தூள், உப்பு போட்டு புரட்டவும். அதனுடன் உதிர்த்து வைத்திருக்கும் மீனைப் போட்டு 3 நிமிடங்களுக்குக் கிளறி, அதனுடன் தேங்காய்த் துருவலைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். சுவையான சுறா மீன் புட்டு தயார்.