தேவையானவை:
சிக்கன் - முக்கால் கிலோ
காளான் - கால் கிலோ
குடமிளகாய் - இரண்டு
வெங்காயம் - இரண்டு
தக்காளி - நான்கு
இஞ்சி - இரண்டு அங்குலத்துண்டு
பூண்டு - ஆறு பற்கள்
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
வெண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - ஒரு பிடி
செய்முறை
சிக்கனைச் சிறு சிறு துண்டுகளாக்கி, சிறிது உப்பைப் போட்டு வேகவைத்து வடிகட்டிக் கொள்ளவும். காளானை நன்கு துடைத்து நான்கு, நான்காக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், குடமிளகாயை ஒரே அளவாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நன்கு கரைத்துக் கொள்ளவும். மசாலாத்தூள் வகைகளை சிறிது நீர் சேர்த்து குழைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், எண்ணெயைக் கலந்து காயவைக்கவும். முதலில் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பிறகு இஞ்சி, பூண்டு, சீரகம் விழுது போட்டு நன்கு வதக்கவும். பிறகு குழைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு தொடர்ந்து தக்காளி கரைசலை ஊற்றி உப்பைச் சேர்த்து நன்கு எண்ணெய் கக்கும் வரை வதக்கவும்.
பிறகு சிக்கனையும் குடமிளகாயையும் போட்டு நன்கு கிளறி விடவும். ஒரு கோப்பை தண்ணீர் அல்லது சிக்கன் வெந்த சூப்பை ஊற்றி அனலை குறைத்து வைத்து வேகவிடவும். பச்சை வாசனை நீங்கி மசாலா பதம் வந்தவுடன் அரிந்து வைத்துள்ள காளானைப் போட்டு நன்கு கிளறி ஐந்து நிமிடங்கள் கழித்து இறக்கி கொத்தமல்லியால் அலங்கரித்துச் சூடாக பரிமாறவும்.

கருத்துகள்
கருத்துரையிடுக