தேவையான பொருட்கள்:
குதிரைவாலி-1 கப்;
பீன்ஸ்-10 ( பொடியாக நறுக்கியது);
கேரட்- பாதியளவு- (நன்கு துருவியது);
தேங்காய்( துருவியது)-1/4 கப்;
தேங்காய் எண்ணெய்-தாளிக்க;
கடுகு-1 டீ ஸ்பூன்;
உளுத்தம் பருப்பு-1 ட்ஸ்பூன்;
சிவப்பு மிளகாய்-2;
பெருங்காய பௌடர்-1/4 டீஸ்பூன்;
தண்ணீர்-2 கப்;
கறிவேப்பிலை மற்றும் உப்பு.
செய்முறை:
குதிரைவாலியைக் கழுவி தனியாக வைக்கவும்/. ஒரு குக்கரில் தேங்காயெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, சிவப்பு மிளகாய் மற்றும் பெருங்காயம் போட்டு தாளிக்கவும். நறுக்கிய பீன்ஸ், கேரட்டைப் போட்டு 2 நிமிடம் வதக்கவும். தேங்காய்த் துருவலை சேர்க்கவும். . அத்துடன் சுத்தம் செய்யப்படட் குதிரவாலியை சேர்த்து, தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கி மூடவும். 4 விசில் விட்டு எடுக்கவும். சாதாரணமாகவும் சாப்பிடலாம். தேங்காய்ச் சட்னியுடனும் சாப்பிடலாம்.

கருத்துகள்
கருத்துரையிடுக