தேவையானவை:
காலிஃப்ளவர் சிறியது - ஒன்று
மைதா மாவு - ஒரு மேசைக்கரண்டி
கார்ன்ஃப்ளார் - அரை மேசைக்கரண்டி
தனி மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை + ஒரு தேக்கரண்டி
குடமிளகாய் - ஒன்று
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 3 மேசைக்கரண்டி
வெங்காயம் - 2
மிளகாய்த்தூள் - ஒன்றரை தேக்கரண்டி
பூண்டு - 8 பல்
செய்முறை:
பூண்டை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், குடமிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காலிஃப்ளவரை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருள்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு தட்டில் காலிஃப்ளவர் துண்டுகளைப் போட்டு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சுடுநீரை ஊற்றி 5 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் எடுத்து தண்ணீரை வடிகட்டி அதனுடன் மைதா மாவு, கார்ன்ஃப்ளார், மிளகாய் தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டு பிசைந்துக் கொள்ளவும். அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசறி 10 நிமிடம் ஊற வைக்கவும்.
வாணலியில் ஒன்றரை கப் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ஊற வைத்த காலிஃப்ளவர் துண்டுகளை போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு போட்டு நிறம் மாறும் வரை வதக்கவும். நிறம் மாறியதும் அதில் வெங்காயம், குடமிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு வதக்கி விட்டு அதில் மஞ்சள்தூள் சேர்த்து பிரட்டிவிட்டு வதக்கவும். இஞ்சி - பூண்டு வாசனை அடங்கி, குடமிளகாய் மற்றும் வெங்காயம் வதங்கியதும் தக்காளி சாஸ் ஊற்றி தனி மிளகாய்த்தூள் போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி கிளறி விடவும்.
5 நிமிடம் கழித்து பொரித்து வைத்திருக்கும் காலிஃப்ளவரை போட்டு நன்கு கிளறி விடவும். பிறகு 3 அல்லது 5 நிமிடங்கள் கழித்து இறக்கி வைத்து விடவும். சுவையான கோபி மஞ்சூரியன் தயார். பரிமாறும்போது மேலே கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

கருத்துகள்
கருத்துரையிடுக