முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முடக்கத்தான் கீரைத் துவையல்


தேவையான பொருட்கள்:

முடக்கத்தான் கீரை-1 கப்; 
மிளகாய் வற்றல்-8; 
நல்லெண்ணெய்-தேவையான அளவு;
பெருங்காயம்-சிறிதளவு; 
உளுத்தம் பருப்பு-சிறிதளவு; 
கடுகு-சிறிதளவு; 
புளி-எலுமிச்சம் பழ அளவு; 
உப்பு-தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, மிள்காயை நன்கு வறுத்துக்கொள்ளவும். அத்துடன் புளியையும், சுத்தம் செய்த கீரையையும்சேர்த்து, நன்கு வதக்கிஎடுத்து அரைத்தால், கமகமக்கும் துவையல் தயார். மிக்ஸியில் அரைப்பதைவிட அம்மிக் கல்லில் அரைத்தால், கூடுதல் சுவை இருக்கும்.குறைந்தது 3 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.
பலன்:
வைட்டமின்களும் தாது உப்புக்களும் நிறைந்தது, முடக்கத்தான் கீரை. இந்த துவையலை, உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொள்வதன் மூலம், மூல நோய், மலச் சிக்கல், பக்கவாதம், மூட்டு நோய்கள் போன்றவை குணமடையும். மூட்டுகளில் தங்கியிருக்கும் புரதம், யூரிக் அமிலம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் கொழுப்புத் திரட்சி, படிமங்களைக் கரைத்து வலிகளைப் போக்கும். மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு, இக்கீரை மிகவும் நல்லது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறுகு தானிய உப்புமா

தேவையான பொருட்கள்: குதிரைவாலி அரிசி-100 கிராம்;  சாமை அரிசி-50 கிராம்;  வரகு அரிசி-100 கிராம்;  தினை அரிசி-50 கிராம்;  காய்கறிகள்-1 கப் ( தேவைக்கேற்ப);  நல்லெண்ணெய்-தேவைக்கேற்ப;  மிளகாய் வற்றல்-6;  கடுகு-சிறிதளவு;  உளுத்தம் பருப்பு-சிறிதளவு;  கறிவேப்பிலை-சிறிதளவு;  கொத்தமல்லி-சிறிதளவு;  உப்பு-தேவையான அளவு. செய்முறை: ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, அதனுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தாளிக்கவும். அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வெட்டிவைத்த காய்கறிகளையும் உப்பையும் கலந்து 2 நிமிடம் வேகவிடவும். இத்துடன் குருணையாகக்ப்படட் குதிரைவாலி, சாமை, வரகு மற்றும் தினை அரிசியைக் சேர்த்து நன்றாக வேகும்வரை கிளறினால், குறுதானிய உப்புமா தயார். பலன்கள்: குறுதானியங்களில் உள்ள கனிம சத்து, உடல் கட்டமைப்பை செதுக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. பாஸ்பரஸ், சுண்ணாம்புச் சத்துடன் சேர்ந்து, எலும்பு, பல் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் பாஸ்பேட்டாக மாறுகிறது. செல் வளர்சிதை மாற்றத்திலும்...

இறால் ஃப்ரை

தேவையானவை: இறால் - 200 கிராம் உருளைக்கிழங்கு - 2 இஞ்சி - பூண்டு விழுது - 2 தேக்கரண்டி பெரிய வெங்காயம் - ஒன்று தக்காளி விழுது - கால் கப் மிளகாய்தூள் - அரை தேக்கரண்டி மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி மிளகு, சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி கடுகு - அரை தேக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு கொத்து எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: இறாலைச் சுத்தம் செய்து ஒரு தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி விழுது, மிளகாய்தூள், மஞ்சள்தூள், மிளகு, சீரகத்தூள், உப்பு, நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும். உருளைக்கிழங்கு வெந்து, நீர் வற்றி மசாலா புரண்டு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், ஒரு தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து தாளிக்கவும். தாளித்தவற்றுடன் வேகவைத்த கலவையைக் கொட்டி 3 நிமிடங்கள் கிளறி இறக்கவும். சுவைமிக்க இறால் ஃப்ரை ரெடி.

சுறா மீன் புட்டு

தேவையானவை:- சுறா மீன் - 3 துண்டு மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி தண்ணீர் - ஒரு கப் பச்சை மிளகாய் - 2 சின்ன வெங்காயம் - 10 சோம்புத்தூள் - அரை தேக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு கொத்து உப்பு - அரை தேக்கரண்டி எண்ணெய் - 2 மேசைக்கரண்டி தேங்காய் - கால் கப் செய்முறை:- சுறா மீன் துண்டுளின் மேலே உள்ள தோலை உரித்து சுத்தம் செய்து கொள்ளவும். மீனுடன் 2 கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள்தூள் போட்டு மூடி 8 நிமிடங்கள் வேக வைக்கவும். வெந்ததும் மீனை எடுத்து உதிர்த்து விடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பின்னர் கறிவேப்பிலை போட்டு வதக்கி விட்டு, சோம்புத்தூள், உப்பு போட்டு புரட்டவும். அதனுடன் உதிர்த்து வைத்திருக்கும் மீனைப் போட்டு 3 நிமிடங்களுக்குக் கிளறி, அதனுடன் தேங்காய்த் துருவலைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். சுவையான சுறா மீன் புட்டு தயார்.