முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிக்கன் தர்பாரி...

தேவையானவை:-

கோழி - அரை கிலோ
தக்காளி - 2
கொண்டைக்கடலை - 100 கிராம்
முந்திரி - 10
தேங்காய் - ஒரு மூடி
புளி - நெல்லிக்காய் அளவு
இஞ்சி - ஒரு துண்டு
மலைப் பூண்டு - 5
காய்ந்த மிளகாய் - 4
கிராம்பு - 4
பட்டை - 2 அங்குலத் துண்டு
ஏலக்காய் - 6
மல்லி - ஒரு மேசைக்கரண்டி
கசகசா - அரை மேசைக்கரண்டி
நெய் - 3 மேசைக்கரண்டி
வெங்காயம் - 2 (சிறியது)
மஞ்சள் தூள் - அரைத் தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரைத் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:-

மிதமான சூட்டிலுள்ள வெந்நீரில் புளியைக் கரைத்து வடிகட்டி, ஒரு கப் அளவுக்குப் புளிக்கரைசலை எடுத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி ஒரு கப் அளவுக்குப் பால் எடுத்து வைக்கவும். கோழியைச் சுத்தம் செய்து துண்டுகளாக்கி எடுத்துக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டினை தோலுரித்து காய்ந்த மிளகாயுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். முந்திரியைத் தனியாக அரைத்து வைக்கவும். கிராம்பு, பட்டை, ஏலக்காய், மல்லி, கசகசா ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும். கொண்டைக்கடலையை 3 அல்லது 4 மணி நேரம் ஊறவைத்து, பிறகு வேகவைத்து மசித்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் நெய்விட்டு சூடேறியதும், வெங்காயத்தைப்போட்டு பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு, மிளகாய் விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். பிறகு கோழித் துண்டுகளைச் சேர்த்து, குறைந்த தீயில் வைத்து கோழியில் உள்ள நீர் வற்றும் வரை வேகவிடவும்.
அதனுடன் தக்காளி மற்றும் பொடி செய்து வைத்துள்ள கிராம்பு, ஏலக்காய், மல்லி மசாலாவைச் சேர்த்து நன்கு கிளறிவிட்டு, தீயைச் சற்று அதிகப்படுத்தி வேகவிடவும். மசாலா தக்காளியுடன் நன்கு கலந்து, சிக்கன் வெந்ததும் மசித்து வைத்துள்ள கொண்டைக்கடலை, முந்திரி விழுது மற்றும் தேங்காய்ப்பால் ஆகியவற்றைச் சேர்த்து மேலும் சிறிது நேரம் வேகவிடவும். இறுதியாக புளிக்கரைசலை ஊற்றி, குழம்பு நன்கு கெட்டியாகும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும். சுவையான சிக்கன் தர்பாரி தயார். கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறுகு தானிய உப்புமா

தேவையான பொருட்கள்: குதிரைவாலி அரிசி-100 கிராம்;  சாமை அரிசி-50 கிராம்;  வரகு அரிசி-100 கிராம்;  தினை அரிசி-50 கிராம்;  காய்கறிகள்-1 கப் ( தேவைக்கேற்ப);  நல்லெண்ணெய்-தேவைக்கேற்ப;  மிளகாய் வற்றல்-6;  கடுகு-சிறிதளவு;  உளுத்தம் பருப்பு-சிறிதளவு;  கறிவேப்பிலை-சிறிதளவு;  கொத்தமல்லி-சிறிதளவு;  உப்பு-தேவையான அளவு. செய்முறை: ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, அதனுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தாளிக்கவும். அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வெட்டிவைத்த காய்கறிகளையும் உப்பையும் கலந்து 2 நிமிடம் வேகவிடவும். இத்துடன் குருணையாகக்ப்படட் குதிரைவாலி, சாமை, வரகு மற்றும் தினை அரிசியைக் சேர்த்து நன்றாக வேகும்வரை கிளறினால், குறுதானிய உப்புமா தயார். பலன்கள்: குறுதானியங்களில் உள்ள கனிம சத்து, உடல் கட்டமைப்பை செதுக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. பாஸ்பரஸ், சுண்ணாம்புச் சத்துடன் சேர்ந்து, எலும்பு, பல் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் பாஸ்பேட்டாக மாறுகிறது. செல் வளர்சிதை மாற்றத்திலும்...

இறால் ஃப்ரை

தேவையானவை: இறால் - 200 கிராம் உருளைக்கிழங்கு - 2 இஞ்சி - பூண்டு விழுது - 2 தேக்கரண்டி பெரிய வெங்காயம் - ஒன்று தக்காளி விழுது - கால் கப் மிளகாய்தூள் - அரை தேக்கரண்டி மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி மிளகு, சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி கடுகு - அரை தேக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு கொத்து எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: இறாலைச் சுத்தம் செய்து ஒரு தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி விழுது, மிளகாய்தூள், மஞ்சள்தூள், மிளகு, சீரகத்தூள், உப்பு, நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும். உருளைக்கிழங்கு வெந்து, நீர் வற்றி மசாலா புரண்டு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், ஒரு தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து தாளிக்கவும். தாளித்தவற்றுடன் வேகவைத்த கலவையைக் கொட்டி 3 நிமிடங்கள் கிளறி இறக்கவும். சுவைமிக்க இறால் ஃப்ரை ரெடி.

சுறா மீன் புட்டு

தேவையானவை:- சுறா மீன் - 3 துண்டு மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி தண்ணீர் - ஒரு கப் பச்சை மிளகாய் - 2 சின்ன வெங்காயம் - 10 சோம்புத்தூள் - அரை தேக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு கொத்து உப்பு - அரை தேக்கரண்டி எண்ணெய் - 2 மேசைக்கரண்டி தேங்காய் - கால் கப் செய்முறை:- சுறா மீன் துண்டுளின் மேலே உள்ள தோலை உரித்து சுத்தம் செய்து கொள்ளவும். மீனுடன் 2 கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள்தூள் போட்டு மூடி 8 நிமிடங்கள் வேக வைக்கவும். வெந்ததும் மீனை எடுத்து உதிர்த்து விடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பின்னர் கறிவேப்பிலை போட்டு வதக்கி விட்டு, சோம்புத்தூள், உப்பு போட்டு புரட்டவும். அதனுடன் உதிர்த்து வைத்திருக்கும் மீனைப் போட்டு 3 நிமிடங்களுக்குக் கிளறி, அதனுடன் தேங்காய்த் துருவலைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். சுவையான சுறா மீன் புட்டு தயார்.