முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கிழங்கு கட்லெட்

தேவையான பொருட்கள்: சர்க்கரை வள்ளிக் கிழங்கு-1/2 கிலோ;  கேரட்-1/4 கிலோ; சர்க்கரை-100 கிராம்;  ரொட்டித் துண்டு-4;  பால்-1/4 டம்ளர்;  ஏலத்தூள்-1 தேக்கரண்டி;  ரொட்டித்தூள் அல்லது ரஸ்க் தூள்-சிறிதளவு; நெய், எண்ணெய். செய்முறை: ரொட்டித் துண்டுகளை பாலில் ஊற்வைகக்வும். கிழங்கு, கேரட்டைக் கழுவி, வேக வைத்து, தோலுரித்து மசித்துக்கொள்ளவும். இத்துடன் ரொட்டித் துண்டுகளப் போட்டு கட்டியின்றி பிசையவும். சர்க்கரையுடன் நீர் கலந்து காய்ச்சி,, கம்பிப் பாகு வந்தவுடன், ஏலத்தூள் , பிசைந்த கலவையைப் போட்டு, சிறிது நெய் விட்டு சுருள வதக்கி எடுக்கவும். இந்தக் கலவை வடை மாவு பதத்தில் இருகக்வேண்டும். இதை கட்லெட் வடிவில் தட்டி ரொட்டித் தூள் அல்லது ரஸ்க் தூளில் புரட்டி அடுப்பில் சூடான தவாவில் நெய்/எண்ணெய் விட்டு, சிவக்க வேகவிட்டு எடுக்கவும். சுவையான கிழங்கு, கட்லெட் தயார். இன்னும் வித்தியாசமாக விரும்பினால், தக்காளி சாஸ் தொட்டும் சாப்பிடலாம். கிழங்கு கட்லெட்

பூண்டு சூப்

தேவையான பொருட்கள்: புளித் தண்ணீர்-1 தம்ளர்; பூண்டு-10 பல்;  மிளகு, ஜீரகம் –தலா 2 தேக்கரண்டி;  மல்லித்தழை, கருவேப்பிலை. செய்முறை: புளித் தண்ணீரைக் கொதிக்க விடவும். மிளகு, ஜீரகம், பூண்டு,கருவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்து, அதில் கலக்கவும். வெண்ணெய், உப்பு சேர்த்து நன்கு கொதி வந்ததும், இறக்கி, சுத்தம் செய்த மல்லித்தழை சேர்த்து பருகலாம். மருத்துவ பலன்கள்: பசியைத் தூண்டும். நல்ல கிருமிநாசினி.  ஆஸ்துமா, மூக்கடைப்புக்கு அருமருந்து.  கொழுப்பு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்துக்கு நல்ல நிவாரணி..

அத்திக்காய் வடை

தேவையான பொருட்கள்: அத்திக்காய்-1 கப்( அரை வேக்காடு);  கடலை பருப்பு- 1 கப் (அரை மணி நேரம் ஊறவைத்தது);  கடலை எண்ணெய்- தேவைக்கேற்ப;  வெங்காயம்(பெரியது)-2;  சீரகம்-1 மேஜைக்கரண்டி;  இஞ்சி- சிறிய துண்டு;  காய்ந்த மிளகாய்-4;  கறிவேப்பிலை-சிறிது;  பெருங்காயம்-சிறிது;  உப்பு-தேவையான அளவு. செய்முறை: ஊற வைத்த கடலை பருப்புடன் வேக வைத்த அத்திக்காயை சேர்த்து, வடைக்கான பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயம் சேர்த்து, தட்டையாக தட்டி, கடலை எண்ணெயில் பொந்நிறமாக பொறித்தெடுக்கவும். அத்திக்காய் வடை ரெடி. பயன்: பொதுவாகவே, துவர்ப்பு தன்மையுடன் இருக்கும். அத்திக்காயில் துவர்ப்பு தன்மை சற்று அதிகம். இதை பழமாக சாப்பிடுவதைவிட , காயாக சாப்பிடுவதே நல்லது. அத்திக்காய் வடை ஜீரண உறுப்புகளான கல்லீரல், மண்ணீரல், போன்றவற்றை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும். சிறுநீரகக் கறக்ள் வராமல் தடுக்கும். மலச் சிகக்லையும் விரட்டும்.

கேழ்வரகு அல்வா

தேவையான பொருட்கள்; கேழ்வரகு- 50 கிராம்;  கருப்பட்டி-25 கிராம்;  சர்க்கரை-10 கிராம்;  நெய்- தேவையான அளவு;  நல்லெண்ணெய்-தேவையான அளவு;  ஏலக்காய், முந்திரி மற்றும் திராட்சை-சிறிதளவு. செய்முறை:  ஒரு வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி, கேழ்வரகை 3 நிமிடங்கள் வறுக்க வேண்டும். பிறகு வறுபட்ட கேழ்வரகின் சூடு ஆறும் வரை காத்திருந்து, மீண்டும் அதை ஒரு கடாயில் இட்டு, உடைத்து வைத்திருக்கும் கருப்பட்டியையும் ஒரு தம்ளர் தண்ணீரையும் ஊற்றி கிளறவேண்டும். கூடவே, கொஞ்சம் கொஞ்சமாக நல்லெண்ணெய் மற்றும் நெய் சேர்த்து, கட்டி விழுந்துவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். கலவை, அல்வா பதத்திற்கு வந்தவுடன் ஏலக்காய், முந்திரி, திராட்சை கலந்து இறக்கினால், கேழ்வரகு அல்வா’ தயார். பயன்கள்; கேழ்வரகில் புரதம், சுண்ணாம்பு மற்றும் இரும்புச் சத்து அதிகளவில் இருப்பதுடன், வைட்டமின் பி-1 எனப்படும் தையமின் சத்தும் உள்ளது. இது புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் பெற்றது. மேலும், கேழ்வரகில் உள்ள ‘ட்ரிப்டோபேன்’, அதீத பசி உணர்வை குறைக்கிறது. இதனால், உடல் எடை அதிகரிப்பது தடுக்கப்படுகிறது.

முடக்கத்தான் கீரைத் துவையல்

தேவையான பொருட்கள்: முடக்கத்தான் கீரை-1 கப்;  மிளகாய் வற்றல்-8;  நல்லெண்ணெய்-தேவையான அளவு; பெருங்காயம்-சிறிதளவு;  உளுத்தம் பருப்பு-சிறிதளவு;  கடுகு-சிறிதளவு;  புளி-எலுமிச்சம் பழ அளவு;  உப்பு-தேவையான அளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, மிள்காயை நன்கு வறுத்துக்கொள்ளவும். அத்துடன் புளியையும், சுத்தம் செய்த கீரையையும்சேர்த்து, நன்கு வதக்கிஎடுத்து அரைத்தால், கமகமக்கும் துவையல் தயார். மிக்ஸியில் அரைப்பதைவிட அம்மிக் கல்லில் அரைத்தால், கூடுதல் சுவை இருக்கும்.குறைந்தது 3 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். பலன்: வைட்டமின்களும் தாது உப்புக்களும் நிறைந்தது, முடக்கத்தான் கீரை. இந்த துவையலை, உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொள்வதன் மூலம், மூல நோய், மலச் சிக்கல், பக்கவாதம், மூட்டு நோய்கள் போன்றவை குணமடையும். மூட்டுகளில் தங்கியிருக்கும் புரதம், யூரிக் அமிலம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் கொழுப்புத் திரட்சி, படிமங்களைக் கரைத்து வலிகளைப் போக்கும். மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு, இக்கீரை மிகவும் நல்லது.

நிலக்கடலை பாயசம்

தேவையான பொருட்கள்: நிலக்கடலை- 1 தம்ளர்;  பாதாம் பருப்பு-1/2 தம்ளர்;  பால்-அரை லிட்டர்;  சர்க்கரை-கால் கிலோ;  ஏலத்தூள், முந்திரிப் பருப்பு, உலர்ன்டஹ் திராட்சை. செய்முறை: நிலக்கடலை, பாதாம் பருப்பைதண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைத்து, மிக்ஸியில் நன்கு அரைக்கவும். வாயகன்ற பாத்திரத்தில் பாலைக் காய்ச்சவும்.அத்துடன் சர்க்கரை சேர்க்கவும். கொதிக்கும்போது வேர்க்கடலை, பாதாம் பருப்பு, ஏலத்தூள், உலர்ந்த திராட்சை, நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு, சேர்த்து, நன்கு கிளறவும். ‘கமகம’ வாசனை வரும்போது, இறக்கி பறிமாறவும். குளிர்ச்சியை விரும்பினால், ஆறியதும் அப்படியே ‘ஃப்ரீசரில்’ 1 மணி நேரம் வைத்திருந்து கூல் ஆன பிறகு குடிக்கலாம்.

தினை அரிசி பாயசம்

தேவையான பொருட்கள்: தினை அரிசி-100 கிராம்;  வெல்லம்-1 கப்;  தேங்காய்ப் பால்- 1கப்;  முந்திரி-10;  நெய்-1 ஸ்பூன். செய்முறை: கடாயில் நெய் விட்டு, தினை அரிசியை வறுத்தபின், ஒரு பங்கு அரிசிக்கு , இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும். பின் வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அதனுடன் தேங்காய்ப் பால், வறுத்த முந்திரியை சேர்த்தால், குழந்தைகள் விரும்பும் சுவையான பாயசம் தயார்.